முக்கோணக் காதல்...


கூண்டுக்குள்
பச்சைக் கிளியொன்று
ஆண்டுக் கணக்கில்
அலகாலும் சிறகாலும்
மூங்கில்கள் தீண்டி
அழகு மொழியால்
பழகி விளையாட...

நான்,  கிளி
மூங்கில் கூண்டு
முளைத்தது
முக்கோணக் காதல்...

ஒரு நடு நிசியில்
கிளி பறந்து விட....

கூண்டை
எரிப்பதா புதைப்பதா
கூடி நின்ற
கூட்டம் பேசிக் கொள்ள...

என்னையும்
கிளியையும்

யாரும் தேடவே இல்லை.....