உன் முதல் பார்வை

உன் முதல் பார்வை
உன் முதல்
பார்வைக்கே -என்
அங்க அவயங்கள்
அனைத்தும்
சங்க இலக்கியங்களுக்கு
எழுதுவது போல்
இரவு, பகலாய்
எழுதியும்
முடிந்தபாடில்லை உரை...
இன்னொரு முறையா
தாங்குவேனா
நிலவு வெளிச்சத்திலேயே
காய்ந்த கடலாகிப் போவேனடி....