அணில் கடித்துப் போட்ட

அணில் கடித்துப்   போட்ட
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
பக்தர்கள் பரவசப்பட
பேசி விட்டு திரும்பியவரின்
வாசலில் காலில் மிதிபட்ட
அணில் கடித்துப் போட்ட
அடுத்த வீட்டு கொய்யாவை
கோபத்துடன் எடுத்து
கொய்யா மரம் நோக்கி
வீசி எறிந்து விட்டு
வீட்டுக்குள் நுழையும் முன்
ஜலம் கொண்டு வர சொன்னார்
வேணுகோபால சாஸ்திரி....