மகிழ்வான தருணங்களில்

மகிழ்வான தருணங்களில்
மகிழ்வான தருணங்களில் - என்
மனசில் உந்தி ஊஞ்சலாடி
நிலவை உதைத்து வரும்
செல்ல குழந்தை அவள்....
நெகிழ்வான தருணங்களில்
அவள் மடியில் அசைவின்றி
அயர்ந்து தூங்கிடும்
கடைசி குழந்தை நான்..
இப்படி
பூமிக்கும் ஒருத்தியை
கொடுத்திடு சாமி....
எரிமலை, சுனாமி
பூகம்பம் எல்லாம்
வராமல் போய்விடுமே...