பெரு வெடிப்பை விட


பூவினம் மொத்தமும்
பூத்திருக்கும் அழகை பார் – என
அவளை அழைத்து சென்று
காட்டுவேன் என்னுள் ...

அனைத்தும் அவள் - அங்கே
சிரித்து விளையாடிய போது
சிந்திய விதைகளால்
உதித்த பூங்காவனம் ....

ஜோடி சடை பின்னி – அதில்
கோடி மலர் சூடி
முடிவில்லா சாலையில்
கதை பேசி, கை கோர்த்து
கடைசி வரை நடக்கணும் ...

நிலவுக்கு கூட்டி போய்
நித்தம் புது கதை சொல்லி
அவளுக்கு
பால் சோறு
ஊட்டணும் ...

அங்கும் அவளின்
அழகிய சிரிப்பை
இரண்டு காமிரா கண்களால்
ஏராளமாய் - என்
நெஞ்சில் நிரப்பி வைக்கணும் ...

அவளை
பிரமிக்க வைக்க
பிரபஞ்சம் வெளியே சென்று
பேரண்டம் காட்டுவேன் ...

அங்கே
பெரு வெடிப்பை விட
சத்தமாய் – அவள்
பெயர் கூவுவேன்....

ஆணை மீது - அவளை
அமரச் செய்து
எதிரில் ஓடி வரும்
எலெக்ட்ரான்கள்
எடுத்து தருவேன் – அவள்
அணுவுக்குள்
கோலி விளையாட ....


திடமாவே நிக்கறியே
நடமாடும்
கடவுளைப் பார் என
அவளை அழைத்து சென்று
கடவுளின்
கர்வம் குறைப்பேன் ....