பட்டாம் பூச்சிகளாய்




கண் மலர்கள் பூத்ததும்
நெஞ்சுக் குழி வரை
நெறஞ்சி நிக்கும் – அவள்
பேச்சும்,  சிரிப்பும்
நினைவுகளும்
பட்டாம்பூச்சிகளாய் - என்
மலர் வனத்தில் பறக்க...
காலை வணக்கங்கள்
அவளுக்கு  நான்
கூறும் முன்னே
மலர்கள் முந்திக் கொள்கிறது...