கடவுச்சீட்டு இன்றி






வளர்பிறை மட்டுமே
வரமாய் வாங்கி
வந்த ஓர் நிலா...

கடவுச்சீட்டு இன்றி
கை வீசி நடக்குது
என்னுள் உலா...

அவளைக்
காணும் போதெல்லாம் – மனம்
கடிவாளமில்லா
குதிரையில் சுற்றுலா....

குழிவிழும் சிரிப்பைக்
கண்டு கூத்தாடும்
சிவப்பு, வெள்ளை
செல்களுக்கு திருவிழா....

அவளருகில்
இருக்கும் போது
மறு நொடியே
ஆகுது மனசு
அகிலம் ஆளும்
சக்கரவர்த்தியாய்....

அவள் பிரிவிலோ
அரை நொடியில்
ஆகுது மனசு
உருகி தீர்ந்த
மெழுகுவர்த்தியாய்...