சிட்டுக்குருவியும் அவள் தானோ ???



சிட்டுக்குருவி ஒன்று
கொட்டும் அருவியில்
குளித்து முடித்து
கிளைகள் தாவியும்
கனிகள் தீண்டியும்
மலைகள் தாண்டியும்
களைத்தபாடில்லை...
கண்கள் மூடி
காலையிலிருந்து தியானம்
சிட்டுக்குருவி
கட்டுப்படவே இல்லை...
ஒருவேளை
சிட்டுக்குருவியும் அவள் தானோ  ???