எச்சில் தெறிக்க ...

எச்சில் தெறிக்க
விழித்ததையும்
சிரித்ததையும்
குப்புற படுத்ததையும்
எழுந்ததையும்
நடந்ததையும் – ஏன்
எச்சில் தெறிக்க
பேசியதையும் - ஏதோ
இமாலய சாதனையாப்
எல்லோரிடமும் கூறிய நம்
முதல் ரசிகர்கள்
அம்மாவும், அப்பாவும்..

முடிந்தவரை
அவர்களை மகிழ்வியுங்கள்
இன்றைய ரசிகர்களே...