வாங்கியாச்சு...அசத்தலான பட்டுப் புடவை
அதை ஒத்துப் போகும்
அணிகலன்கள்
புருவம் திருத்தி
முக பூச்சு வேலை முடித்து
வழியில்
வண்ணக் கைப்பையும்
வாங்கியாச்சு...

போக வேண்டியது தான்
பாக்கி..
பக்கத்து வீட்டு
கல்யாணத்துக்கு...