அவலக்குரல்கள்


வேலைக்குப் போன
நம்ப ஆளுங்க
அநியாயமாய் இன்றும்
அடித்து கொல்லப்பட்டார்களே
என
அழுது புலம்பும்
எறும்புகளின்
அவலக்குரல்கள்
கலோரியை எரிக்க
நடக்கும் கால்களுக்கு
கேட்க வாய்ப்பில்லைத் தானே...