கண் முன்னால்


நானும் எனதும்
நலம் வாழ
வேண்டிய போது
என்
கண் முன்னால் கடவுள்

எல்லா உயிர்க்கும் என
வேண்டுதல்
விரிந்த போது
கடவுள்
கண் முன்னால் நான்....